மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் ஆசிரியர் தினம்
11-Sep-2025
மாவட்டத்தில் 10 பேருக்கு நல்லாசிரியர் விருது
05-Sep-2025
குளித்தலை, குளித்தலையில் இருந்து, திருப்பூருக்கு சென்று கொண்டிருந்த கார் விபத்தில் சிக்கியதில், 6 ஆசிரியர்கள் உள்பட 7 பேர் காயமடைந்தனர்.குளித்தலை அடுத்த, ஐநுாற்றுமங்களம் அரசு பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் சரஸ்வதி யின் மருமகன் இறப்பிற்கு, துக்க நிகழ்விற்காக குளித்தலையில் இருந்து கடந்த, 24ம் தேதி மாலை 6:00 மணியளவில், 6 அரசு பள்ளி ஆசிரியர்கள் டிரைவர் உட்பட 7 பேர் காரில் திருப்பூர் நோக்கி சென்றனர். திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றபோது, கருப்பத்துார் ஐயப்பன் கோவில் அருகே, ஒரு மாடு காவிரி ஆற்றில் இருந்து வெளியே வந்து, நடு ரோட்டில் கடந்து சென்றது. அதனை பார்த்த கார் டிரைவர் சத்திய நாராயணன், திடீரென பிரேக் பிடித்து காரை நிறுத்தினார்.அப்போது பின்னால் வந்த, புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த டூரிஸ்ட் வாகனம், காரின் பின்புறம் மோதியது. இதில் காரில் பயணித்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி, 54, தாரகேஸ்வரி, 56, இடைநிலை ஆசிரியர் திலகவதி, 37, உதவி ஆசிரியர்கள் சந்திரபிரபா, 54, குளோரிதங்கம், 57, செல்வியாமோசஸ், 53, கார் டிரைவர் சத்தியநாராயணன், 28, ஆகியோர் படுகாயம் அடைந்தனர். குளித்தலை அரசு மருத்துவமனையில், மூன்று ஆசிரியர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். லாலாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
11-Sep-2025
05-Sep-2025