மேலும் செய்திகள்
மங்கலத்தை பதம் பார்த்த பலத்த காற்று
08-Apr-2025
குளித்தலை: குளித்தலை அடுத்த போத்துராவுத்தன்பட்டி பஞ்., முத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் மரம் வெட்டும் கூலித்தொழிலாளர்கள். இவர்களில், எட்டு பேர், நேற்று காலை, 10:00 மணிக்கு, போத்-துராவுத்தன்பட்டியில் உள்ள விவசாய தோட்டத்தில், முள் செடிகள், மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, மரத்தில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகள் பறந்து வந்து முத்துலட்சுமி, 40, பூரணம், 45, பானுமதி, 37, முருகன், 35, மாணிக்கம், 35, பாலசுப்பிரமணி, இளங்கோவன், 40, செல்-லம்மாள், 50, உள்ளிட்ட எட்டு கூலித்தொழிலாளர்களை துரத்தி துரத்தி கடித்தது.வலியால் துடித்த அவர்களை மீட்டு, குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து, தோகைமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
08-Apr-2025