உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் அருகே பயன்பாடின்றி காணப்படும் கழிப்பிடம்

கரூர் அருகே பயன்பாடின்றி காணப்படும் கழிப்பிடம்

கரூர்: கரூர் அருகே, பொது கழிப்பிடம் முட்புதர்கள் முளைத்து பயனற்ற நிலையில், சேதமடைந்துள்ளது. இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.கரூர் அருகே, சுக்காலியூர் காமராஜ் நகரில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, சில ஆண்டுகளுக்கு முன் பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. அதை, அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கழிப்பிடம் சில மாதங்களுக்கு முன் சேதமடைந்தது. மேலும், கழிப்பிடத்துக்குள் நுழைய முடியாதபடி அதிகளவில் முட்புதர்கள் முளைத்துள்ளது. இதனால், அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல், திறந்த வெளிப்பகுதியை பயன்படுத்தி வருகின்றனர். எனவே, சேதமடைந்து முட்புதர்களால் சூழப்பட்டுள்ள, கழிப்பிடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி