பூட்டி கிடக்கும் கழிப்பறை
கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பாலம்மாள்புரத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு, மக்கள் வசதிக்காக, ரயில்வே மேம்பாலம் அருகே கழிப்பறை கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் கழிப்-பறை மூடப்பட்டது. அங்கு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்-பட்டு, திறக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், எந்த பணிகளும் நடக்காமல், நீண்ட நாட்களாக கழிப்பறை பூட்-டியே கிடக்கிறது. அப்பகுதி மக்கள் திறந்தவெளியை கழிப்பிட-மாக பயன்படுத்தும் சூழ்நிலை உள்ளது. பூட்டி கிடக்கும் கழிப்ப-றையை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.