காவிரி ஆற்றில் குளித்தவர் தண்ணீரில் மூழ்கி சாவு
காவிரி ஆற்றில் குளித்தவர்தண்ணீரில் மூழ்கி சாவுகுளித்தலை, அக். 22-நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த, காவல்காரன்பட்டியை சேர்ந்தவர் ஹரிபிரசாத், 20. இவர் தனது ஊரை சேர்ந்த மிதுன், சதீஷ், ஆகாஷ் ஆகியோருடன் நேற்று முன்தினம் மாயனுார் காவிரி ஆறு செல்லாண்டியம்மன் கோவில் அருகே குளிக்க சென்றனர்.அங்கு படித்துறையில் இறங்கி, நடு ஆற்றில் ஹரி பிரசாத் குளித்த போது நீரில் மூழ்கினார். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நீரில் மூழ்கிய ஹரி பிரசாத்தை இறந்த நிலையில் சடலமாக மீட்டனர்.கரூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் உடல் வைக்கப்பட்டுள்ளது. ஹரிபிரசாத் தந்தை பழனிசாமி அளித்த புகார்படி, மாயனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.