உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / எலவனுாரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்

எலவனுாரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்

கரூர், எலவனுாரில், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், எலவனுார் பஞ்.,ல், 3,000க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு விவசாயம் மற்றும் நெசவு தொழில் பிரதானமாக உள்ளது. எலவனுார், சின்ன வாணிக்கரை, பெரிய வாணிக்கரை, ஒத்தையூர், காந்தி நகர், மேட்டூர் உள்ளிட்ட பகுதி மக்கள் சிகிச்சை பெற, எலவனுாரில் துணை சுகாதார நிலையம் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள், கர்ப்பிணி பெண்கள் மருத்துவ சிகிச்சைக்காக, 10 கி.மீ., துாரமுள்ள காசிபாளையத்துக்கும், 12 கி.மீ., துாரமுள்ள சின்னதாராபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் செல்ல வேண்டியுள்ளது.இந்த பகுதியிலிருந்து, வேறு பகுதிக்கு செல்ல அதிகளவில் பஸ் வசதியும் இல்லை. குறிப்பிட்ட நேரத்துக்கு செல்லும் அரசு டவுன் பஸ்சை தவற விட்டால், எல்லமேடு சென்றுதான் காசிபாளையம் மற்றும் சின்னதாராபுரம் பகுதிகளுக்கு செல்ல முடியும். இரவு, 10:00 மணிக்கு மேல் பஸ் வசதி இல்லாததால், பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் அவதிப்படுகின்றனர்.எனவே, எலவனுாரில் செயல்படும் துணை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி