உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டிரான்ஸ்பார்மரை சுற்றி தடுப்பு கம்பி நடலாமே

டிரான்ஸ்பார்மரை சுற்றி தடுப்பு கம்பி நடலாமே

டிரான்ஸ்பார்மரை சுற்றிதடுப்பு கம்பி நடலாமேகுளித்தலை, நவ. 17-டிரான்ஸ்பார்மரை சுற்றி, இரும்பு தடுப்பு கம்பி அமைக்க வேண்டும்.குளித்தலை, காந்தி சிலை எதிரில் திருச்சி மார்க்கம் செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் நிழற்கூடம் உள்ளது. இதன் அருகில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இதன் அருகில் உணவகம், டைலர் கடைகள் உள்பட ஏராளமான கடைகள் உள்ளன.மேலும், கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. டிரான்ஸ்பார்மர் திறந்த வெளியில் இருப்பதால் பொது மக்களுக்கும், கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, டிரான்ஸ்பார்மரை சுற்றி, இரும்பு தடுப்பு கம்பிகள் வைத்து பாதுகாக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை