மேலும் செய்திகள்
சென்னையில் மின்சாரம் தாக்கி மூன்று பேர் பலி
30-Nov-2024
கரூர், :கரூர் அருகே, பைக் மீது லாரி மோதிய விபத்தில், பொறியியல் கல்லுாரி மாணவர் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், நெரூர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் சேது, 22; கரூர் தளவாப்பாளையத்தில் உள்ள, தனியார் பொறியியல் கல்லுாரியில் பிசிக்கல் சயின்ஸ், இரண்டாமாண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை, சகோதரன் ஸ்ரீதரன், 21; என்பவருடன், வாங்கல் சாலையில் பஜாஜ் பைக்கில் சென்று கொண்டிருந்தார். பைக்கை சேது ஓட்டியுள்ளார்.அப்போது, அந்த வழியாக தஞ்சாவூரை சேர்ந்த அமல்தாஸ், 33; என்பவர் ஓட்டி சென்ற லாரி, பைக் மீது மோதியது. அதில், கீழே விழுந்த சேது, அதே இடத்தில் உயிரிழந்தார். ஸ்ரீதரனுக்கு காயம் ஏற்பட்டது. வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
30-Nov-2024