மேலும் செய்திகள்
மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
16-Jun-2025
கரூர், ஆத்துப்பாளையம் அணை விரைவில் நிரம்ப உள்ளதால், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன், கார்வாழி ஆத்துப்பாளையம் அணை, 18 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த, 2019 நவம்பரில் நிரம்பியது. இதையடுத்து, பாசனத்துக்காக நொய்யல் வாய்க்காலில், தண்ணீர் திறக்கப்பட்டது. அதை தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த, 15 நாட்களாக நீர் பிடிப்பு பகுதிகளில், மழை பெய்து வருவதால், ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து துவங்கியது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு, 190 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 24.93 அடியாக இருந்தது. இதனால், விரைவில் அணை நிரம்ப வாய்ப்புள்ளதால், பாசனத்துக்காக நொய்யல் வாய்க்காலில், தண்ணீர் திறக்கப்படும் என, விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆத்துப்பாளையம் அணை மூலம், க.பரமத்தி, கரூர் பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில், 19 ஆயிரத்து, 500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
16-Jun-2025