அபய பிரதான ரெங்கசாமி கோவில் சித்திரை திருவிழா
கரூர்:அபயபிரதான ரெங்கசாமி சுவாமி கோவில், சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.பிரசித்தி பெற்ற, அபயபிரதான ரெங்கசாமி சுவாமி கோவிலில், சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் கோவிலில், பூர்வாங்க பணிகள் தொடங்கின. நேற்று காலை கொடியேற்றத்துடன், சித்திரை திருவிழா தொடங்கியது. பிறகு, மாலை அன்னப்பறவை வாகனத்தில், உற்சவர் ரெங்கசாமி சுவாமியின் திருவீதி உலா நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.வரும், 8 ல் திருக்கல்யாண உற்சவம், 10 ல் தேரோட்டம், 11 ல் அமராவதி ஆற்றில் தீர்த்தவாரி, 12 ல் ஆளும் பல்லாக்கு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி காந்தன், செயல் அலுவலர் இளையராஜா ஆகியோர் செய்து வருகின்றனர்.