ஆதி தமிழர் பேரவை மனு
கரூர், கரியமாபுதுார் மக்களுக்கு, இலவச பட்டா வழங்க வேண்டும் என, ஆதி தமிழர் பேரவை மாவட்ட செயலர் பாரதி தலைமையில், கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அதில், கூறியிருப்பதாவது:அரவக்குறிச்சி அருகே, கோடந்துார் கிராமம் கரியமாபுதுாரில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்கள், பலதலைமுறையாக சொந்த இடம் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.இங்கு இருப்பவர்கள் கூலி தொழிலாளர்களாக இருப்பதால், சொந்த வீடு கட்ட முடியாமல் இருந்து வருகின்றனர். பல ஆண்டுகளாக வசித்து வருவதால், அந்த இடத்தை ஆய்வு செய்து இலவச பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.