உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலை விபத்தில் அ.தி.மு.க., பிரமுகர் பலி

சாலை விபத்தில் அ.தி.மு.க., பிரமுகர் பலி

சாலை விபத்தில் அ.தி.மு.க., பிரமுகர் பலிகரூர், நவ. 5-வேலாயுதம்பாளையம் அருகே நடந்த, சாலை விபத்தில் படுகாயம் அடைந்த, அ.தி.மு.க., பிரமுகர் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன், 34; அ.தி.மு.க., பிரமுகர். இவர் கடந்த, 1ல் மாலை வேலாயுதம்பாளையம் அருகே காகித ஆலை கேட் பகுதியில், பேஷன் புரோ பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே சிவனடியான் என்பவர் ஓட்டி சென்ற மற்றொரு பைக்கும், பிரபாகரன் சென்ற பைக்கும் நேருக்கு நேர் மோதியது. அதில், கீழே விழுந்த பிரபாகரன் தலையில் படுகாயம் ஏற்பட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பிரபாகரன் உயிரிழந்தார். இதுகுறித்து, பிரபாகரனின் தாய் ராணி, 54, கொடுத்த புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ