உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரூ. 36.93 லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் ஏலம்

ரூ. 36.93 லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் ஏலம்

கரூர், சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 36 லட்சத்து, 93 ஆயிரத்து, 924 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.நொய்யல் அருகில், சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 50.15, அதிகபட்சமாக, 65.99, சராசரியாக, 62.19 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், மூன்று லட்சத்து, 56 ஆயிரத்து, 201 ரூபாய்க்கு தேங்காய்கள் விற்பனையானது. கொப்பரை தேங்காய், முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 206.39, அதிகபட்சமாக, 216.59, சராசரியாக, 212.99, இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 168.39, அதிகபட்சமாக, 207.19, சராசரியாக, 194.39 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தமாக, 7,674 கிலோ தேங்காய்பருப்பு, 14 லட்சத்து, 95 ஆயிரத்து, 526 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.கருப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 97.72, அதிகபட்சமாக, 127.60, சராசரியாக, 119.20, சிவப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 92.99, அதிகபட்சமாக, 131.99, சராசரியாக, 126.89 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 16,259 கிலோ எடையுள்ள எள், 18 லட்சத்து, 42 ஆயிரத்து, 197 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 36 லட்சத்து, 93 ஆயிரத்து, 924 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை