ரூ.89.12 லட்சம் மதிப்புள்ள வேளாண் பொருட்கள் ஏலம்
கரூர், சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 89 லட்சத்து, 12 ஆயிரத்து, 885 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.கரூர் மாவட்டம் நொய்யல் அருகில், சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 27 ஆயிரத்து, 820 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 58.69 ரூபாய், அதிகபட்சமாக, 72.79, சராசரியாக, 68.79 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 9,301 கிலோ எடையுள்ள தேங்காய்கள், ஆறு லட்சத்து, 25 ஆயிரத்து, 509 ரூபாய்க்கு விற்பனையானது.கொப்பரை தேங்காய் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 253.39, அதிகபட்சமாக, 262.89, சராசரியாக, 260.80, இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 186.99, அதிகபட்சமாக, 257.50, சராசரியாக, 252.39 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 32 ஆயிரத்து, 129 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 80 லட்சத்து, 20 ஆயிரத்து, 301 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.எள் சிவப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 81.19, அதிகபட்சமாக, 95.99, சராசரியாக, 90.09 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 3,451 கிலோ எடையுள்ள எள், இரண்டு லட்சத்து, 67 ஆயிரத்து, 75 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 89 லட்சத்து, 12 ஆயிரத்து, 885 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.