உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அகில இந்திய கூடைப்பந்து: மத்திய ரயில்வே அணி வெற்றி

அகில இந்திய கூடைப்பந்து: மத்திய ரயில்வே அணி வெற்றி

கரூர்: கரூர் திருவள்ளுவர் மைதானத்தில், கூடைப்பந்து குழு சார்பில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி நடந்து வருகிறது. போட்டியில் ஆண்கள் பிரிவில், 8 அணிகள், பெண்கள் பிரிவில், 4 அணிகள் விளையாடுகின்றன.நேற்று நடந்த ஆண்கள் போட்டியில், புனே கஸ்டம்ஸ் அணியும், டில்லி மென் பி.பி.ஏ., அசோசியேஷன் அணியும் மோதின. விறுவிறுப்பாக நடந்த போட்டியில், 69க்கு 61 என்ற புள்ளிக் கணக்கில் டில்லி மென் பி.பி.ஏ., அசோசியேஷன் என வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில், 60க்கு 59 என்ற புள்ளிக்கணக்கில் சென்னை ஐ.சி.எம்., அணி, டில்லி சென்ட்ரல் செக்கரேட்டரைட் அணியை வெற்றது. பெண்கள் பிரிவில் மத்திய ரயில்வே அணியும், வடக்கு ரயில்வே அணியும் மோதின. அதில், 55 க்கு 46 என்ற புள்ளிக்கணக்கில், மத்திய ரயில்வே அணி வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை