உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காத்திருப்பு அறையில் வசதியில்லை ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் மனு

காத்திருப்பு அறையில் வசதியில்லை ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் மனு

கரூர், காத்திருப்பு அறையில் குடிநீர், கழிப்பறை உள்பட அடிப்படை வசதிகள் இல்லை என, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர், கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில், 108 ஆம்புலன்ஸ் சேவை, 19 வாகனங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் டிரைவர்கள், மருத்துவ உதவியாளர் உள்பட தொழிலாளர்கள், அழைப்புகள் இல்லாத போது காத்திருக்க அறைகள் உள்ளன.அங்கு, கழிப்பறை வசதி கூட இல்லாமல் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். குடிநீர் இல்லாமல் அலைய வேண்டி உள்ளது. இதனால், தொழிலாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது.தொழிலாளர் சட்டத்தின் கீழ், பாதுகாப்பான ஓய்வறை, குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். ஆனால், ஆம்புலன்ஸ் நிர்வாகம் எந்தவிதமான வசதிகளையும் ஏற்படுத்தி தரவில்லை. இது தொடர்பாக பலமுறை கோரிக்கை அளித்தும் பலனில்லை. எங்களுக்கு குடிநீர், கழிப்பறை அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி