உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் ரயில்வே ஸ்டேஷனில் அம்ருத் பாரத் திட்ட பணிகள் விறுவிறு

கரூர் ரயில்வே ஸ்டேஷனில் அம்ருத் பாரத் திட்ட பணிகள் விறுவிறு

கரூர்: கரூர் ரயில்வே ஸ்டேஷனில், அம்ருத் பாரத் திட்டப்பணிகள் விறு-விறுப்பாக நடந்து வருகிறது.கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், நாடு முழுவதும், 508 ரயில்வே ஸ்டேஷன்களில், அம்ருத் பாரத் என்ற திட்டத்தின் கீழ், விரி-வாக்கம் செய்யும் பணிகளை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதில், கரூர் ரயில்வே ஸ்டேஷனில் மட்டும், 34 கோடி ரூபாய் செலவில் விரிவாக்க பணிகள் தொடங்கியது. கார் பார்க்கிங், புதிய கழிப்பிட வசதி, ரயில்வே ஸ்டேஷன் முகப்பு மாற்றம், கேன்டீன், பிளாட்பாரங்களில் இருக்கை வசதி உள்-ளிட்ட பணிகள் முக்கியமானவை.கரூர் ரயில்வே ஸ்டேஷனில், வரும் மார்ச் மாதத்துக்குள், விரி-வாக்க பணிகளை நிறைவு செய்ய ரயில்வே அதிகாரிகள் திட்ட-மிட்டுள்ளனர். கரூர் ரயில்வே ஸ்டேஷனில், அம்ருத் பாரத் திட்-டப்பணிகளில், 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ரயில்வே ஸ்டேஷன் முகப்பு பகு-திகளை, வடிவமைத்து அதன் கட்டமைப்பு பணிகளில் பணியா-ளர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை