ஆண்டிபாளையத்துக்கு குடிநீர் தொட்டி தேவை
கிருஷ்ணராயபுரம், ஆண்டிபாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள, மேல்நிலை குடிநீர் தொட்டி பலவீனமாகி உள்ளதால், புதிதாக குடிநீர் தொட்டி கட்ட வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணராயபுரம் அடுத்த ஆண்டிபாளையம் கிராமத்தில், பஞ்., சார்பில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி கட்டி நீண்ட ஆண்டுகளாகி விட்டதால், பலவீனமடைந்துள்ளது.இதனால் தொட்டி கீழே சரிந்து விழும் அபாயத்தில் இருப்பதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். பழைய தொட்டியை அகற்றி விட்டு, அந்த இடத்தில் புதிதாக ஒரு மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய வி.சி., கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் வன்னியரசு, மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.