உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அங்கன்வாடி உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

அங்கன்வாடி உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கரூர்: அங்கன்வாடி உதவியாளர்கள் சங்கம் சார்பில், காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது.கரூர் கலெக்டர் அலுவலக வளகத்தில் உள்ள, ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலகம் முன், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில் காத்திருப்பு போராட்டத்தில், நேற்று இரவு, 9:00 மணி முதல் ஈடுபட்டு வருகின்றனர் மாவட்ட செயலாளர் சாந்தி தலைமை வகித்தார்.மாவட்டத்தில் குறு அங்கன்வாடியில், ஐந்து ஆண்டு களாக பணியாற்றும் ஊழியர்களுக்கு அங்கன்வாடி மையத்திற்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். அங்கன்வாடியில், 10 ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றியவர்களுக்கு, பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு போராட்டம் நடத்தப்பட்டது. அதனை நிறைவேற்றவில்லை என்பதால், காத்திருப்பு போராட்டத்தில், 60க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். திடீரென இரவு நேரத்தில் காத்திருப்பு போராட்டம் நடப்பதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி