உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அண்ணாதுரை பிறந்த நாள்:மாஜி அமைச்சர் அழைப்பு

அண்ணாதுரை பிறந்த நாள்:மாஜி அமைச்சர் அழைப்பு

கரூர்:கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கை: தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 117வது பிறந்த நாள் விழா, இன்று மாநிலம் முழுவதும் அ.தி.மு.க., சார்பில் நடக்கிறது. அதையொட்டி, கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் உள்ள, அண்ணாதுரை சிலைக்கு, இன்று காலை, 9:30 மணிக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்படுகிறது. மேலும், முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. அதில், கரூர் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை