போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரம்
குமாரபாளையம்:குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில், பஸ் ஸ்டாண்ட், ஆட்டோ ஸ்டாண்ட்களில் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு செய்யப்பட்டது. கல்லுாரி முதல்வர்(பொ) சரவணாதேவி தலைமை வகித்தார். குமாரபாளையம் எஸ்.எஸ்.ஐ., பொன்னுசாமி துண்டுபிரசுரம் வழங்கி துவக்கி வைத்தார். நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், போதை பொருள் எதிர்ப்பு குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ரமேஷ் குமார் செய்திருந்தார்.