உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கண்டுணர்வு சுற்றுலா சென்ற அரவக்குறிச்சி விவசாயிகள்

கண்டுணர்வு சுற்றுலா சென்ற அரவக்குறிச்சி விவசாயிகள்

அரவக்குறிச்சி :அரவக்குறிச்சி, வட்டார வேளாண்மை துறை சார்பில், ஆத்மா திட்டத்தின் கீழ், 20 விவசாயி கள் கண்டுணர்வு சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை துறை சார்பில், ஆத்மா திட்டத்தின் கீழ், மாநில அளவிலான விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா, கேரளா மாநிலம், தென்னை ஆராய்ச்சி நிலையமான, சி.பி.சி.ஆர்.ஐ., காசர்கோடுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அரவக்குறிச்சி, கரூர் மாவட்ட விவசாயிகள் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.சுற்றுலாவில் தென்னை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்து விவசாயிகளுக்கு டாக்டர் பொன்னுசாமி விளக்கம் அளித்தார். தொடர்ந்து டாக்டர் மணிகண்டன், மதிப்பு கூட்டுதல் இயந்திரங்கள் குறித்து செயல்விளக்க பயிற்சி, தொழில்நுட்ப பயிற்சி குறித்து விளக்கம் அளித்தார். மேலும் தென்னையில் மதிப்பு கூட்டிய பொருட்களான தேங்காய் சிப்ஸ், தேங்காய் பால், தேங்காய் சர்க்கரை போன்ற தயாரிப்பு முறைகளை, எவ்வாறு செய்வது என்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை