உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில் வாட்டி வதைக்கும் கடும் குளிரால் அவதி

அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில் வாட்டி வதைக்கும் கடும் குளிரால் அவதி

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக வாட்டி வைக்கும் குளிரால், அதிகாலையில் தீ மூட்டி குளிர் காயும் நிலை ஏற்பட்டுள்ளது.சின்னதாராபுரம் அருகே தொக்குப்பட்டிபுதுார் உள்ளிட்ட கிராம பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் வகையில் வீடுகளின் முன்பாகவும், சாலையோரங்களிலும் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். அதிகாலை நேரங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக, வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.இப்பகுதியில் பெரும்பாலானோர் விவசாயிகள் மற்றும் கூலிகளாக உள்ளதால், அதிகாலையில் பணிக்கு செல்லும்போது, கடும் குளிர் காரணமாக தவிக்கின்றனர். இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதோடு, அன்றாட வருமானமும் குறைந்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடும் குளிர் நிலவி வருவதால், பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது குளிரின் தாக்கம், இயல்பை விட அதிகமாக இருப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ