உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் அருகே மதுபாட்டில் வாங்குவதில் தகராறு: அடித்த Mகும்பல்

கரூர் அருகே மதுபாட்டில் வாங்குவதில் தகராறு: அடித்த Mகும்பல்

கரூர்: கரூர் அருகே, டாஸ்மாக் கடையில் மது பாட்டில் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில், வாலிபரை, எதிர் தரப்பினர் விரட்டி, விரட்டி அடித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.கரூர் மாவட்டம், திருச்சி சாலை புலியூரில் டாஸ்மாக் மதுபான கடை செயல்படுகிறது. அதில் கடந்த, 24ம் தேதி மாலை புலியூர் அமராவதி நகரை சேர்ந்த வில்சன், 28, என்பவர் மது பாட்டில் வாங்க சென்றுள்ளார். அப்போது, வீரராக்கியம்,ஆர். புதுக்கோட்டையை சேர்ந்த சூர்யா, 23; குபேந்திரன், 22; கார்த்திக், 22; விக்கி, 22; ஆகியோரும் மதுபாட்டில் வாங்க சென்றுள்ளனர். முதலில் யார் மது பாட்டில் வாங்குவது, என்ற போட்டியில் வில்சனுக்கும், சூர்யா தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த சூர்யா தரப்பினர், வில்சனை தடியால் விரட்டி விரட்டி அடித்தனர். அதில், படுகாயமடைந்த வில்ன், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார்.இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, வில்சனை தாக்கிய சூர்யா, குபேந்திரன் ஆகிய, இரண்டு பேரை பசுபதிபாளையம் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். கார்த்திக்கும், விக்கியும் தலைமறைவாகி விட்டனர். இவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை