உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாணவர் மீது தாக்குதல்; போலீசார் விசாரணை

மாணவர் மீது தாக்குதல்; போலீசார் விசாரணை

கரூர்: கரூர் அருகே, தனியார் கல்லுாரி மாணவனை தாக்கியதாக, அரசு கலைக்கல்லுாரி மாணவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்டம், தெற்கு காந்தி கிராமம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராம், 20; வெள்ளியணையில், தனியார் கல்லுாரியில் பி.காம்., இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவருக்கும், கரூர் அரசு கலைக்கல்லுாரியில் பி.பி.ஏ., இறுதியாண்டு படித்து வரும், தான்தோன்றிமலை சிவசக்தி நகரை சேர்ந்த துளசி சுதர்சன், 20, என்பவருக்கும் ஏற்கனவே, முன் விரோதம் உள்ளது. இந்நிலையில், ஜெயராம் கடந்த, 27 மாலை, தான்தோன்றிமலை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, துளசி சுதர்சன் தகாத வார்த்தையால் பேசி, ஜெயராமை தாக்கியுள்ளார். இதுகுறித்து, ஜெயராம் கொடுத்த புகார்படி, துளசி சுதர்சன் மீது தான்தோன்றிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை