உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு

வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரத்தில், போலீ சார் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கப்பட்டது.மல்லசமுத்திரத்தில், ஆங்கில புத்தாண்டையொட்டி, மல்லசமுத்-திரம் போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஹெல்மெட் அணி-வதன் முக்கியத்துவம், வாகன விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருச்செங்கோடு டி.எஸ்.பி.,கிருஷ்ணன் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் சுதா, எஸ்.ஐ.,கவிபிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ெஹல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்கள் ஓட்டி வந்த-வர்களுக்கு ெஹல்மெட் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ