மேலும் செய்திகள்
வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு
27-Mar-2025
குளித்தலை:குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நாளை, (25ல்) காலை வழக்கறிஞர் சங்கத்தின் 2025-27ம் ஆண்டிற்கான புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுத்தல் தேர்தல் நடைபெறுகிறது.இந்த சங்கத்தில், 196 வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தலைவர் பதவிக்கு சாகுல் அமீது, மனோகரன் இருவரும், செயலாளர் பதவிக்கு சரவணன், நீலமேகம் இருவரும், துணைத்தலைவர் பதவி மற்றும் இணைச்செயலாளர் பதவிக்கு தலா மூன்று பேர், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு, 12 பேர் போட்டியிடுகின்றனர்.தேர்தல் அதிகாரிகளாக வழக்கறிஞர்கள் முருகானந்தம், விஜயசாரதி ஆகியோர் செயல்படுவர். இதுகுறித்து தேர்தல் அதிகாரி முருகானந்தம் கூறுகையில்,'' இந்த தேர்தலில் துணைத்தலைவர் பதவி (பெண்) சரண்யா, பொருளாளர் பதவிக்கு மாணிக்கவேல் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்,'' என்றார்.
27-Mar-2025