உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மூன்று டிராக்டர்களில் பேட்டரிகள் திருட்டு

மூன்று டிராக்டர்களில் பேட்டரிகள் திருட்டு

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த தாளியம்பட்டியை சேர்ந்த விவசாயிகள் ஆறுமுகம், நாகராஜன், மாணிக்கம் ஆகியோர் சொந்தமாக ஸ்வராஜ் டிராக்டர், மகேந்திரா டிராக்டர் வைத்துள்ளனர். இதை வைத்து நெல் சாகுபடிக்கு உழவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் கடந்த 1ல், புதுப்பட்டி சைமன் பாலம் புங்காற்று நெடுகை பகுதி தென்கரையில், மூன்று டிராக்டர்களை நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்றனர்.அப்போது மர்ம நபர்கள் நிறுத்தப்பட்ட மூன்று டிராக்டர்களில் இருந்து, 6 பேட்டரிகளை திருடி சென்று விட்டனர். புகார்படி, லாலாப்பேட்டை போலீசார், பேட்டரி திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை