உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிருஷ்ணராயபுரத்தில் சீரான விலையில் வெற்றிலை

கிருஷ்ணராயபுரத்தில் சீரான விலையில் வெற்றிலை

கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கள்ளப்பள்ளி, கருப்பத்துார், சிந்தலவாடி, கொம்பாடிப்பட்டி, பிள்ளபாளையம், வீரவள்ளி, மகாதானபுரம், திருக்காம்புலியூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் விளை நிலங்களில் வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனர். வெற்றிலை பயிர்களுக்கு மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும், கட்டளை வாய்க்கால் தண்ணீர் கொண்டு பாசன வசதி பெறுகிறது.செடிகளில் இருந்து தரமான வெற்றிலைகள் பறிக்கப்பட்டு, 100 வெற்றிலை கொண்ட ஒரு கவுளியாக கட்டப்படுகிறது. பிறகு, 100 கவுளிகள் கொண்டு ஒரு மூட்டையாக கட்டப்பட்டு லாலாப்பேட்டை பகுதியில் செயல்படும், வெற்றிலை விற்பனை கமிஷன் மண்டிகளில் கொண்டு வந்து விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.கடந்த வாரம், 100 கவுளி கொண்ட மூட்டை, 3,500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த வாரம், 100 கவுளி கொண்ட மூட்டை, 4,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெற்றிலைகளை மொத்தமாக வாங்கி, சில்லரை விற்பனையாக வெளியூர்களுக்கு கொண்டு சென்று வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். வரும் வாரங்களில் முகூர்த்த சீசன் துவங்குவதால், விலை உயர்வதற்கான வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை