உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பகவதியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா

பகவதியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா

பகவதியம்மன் கோவில்கும்பாபிேஷக விழாகிருஷ்ணராயபுரம், நவ. 15-திருக்காம்புலியூர், ஆனந்த விநாயகர், பகவதியம்மன், சன்னாசி அப்பர் கோவில் கும்பாபி ேஷக விழா நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த திருக்காம்புலியூரில் ஆனந்த விநாயகர், பகவதியம்மன், சன்னாசி அப்பர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. கும்பாபி ேஷக விழாவை முன்னிட்டு கடந்த, 12ல் காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. 13ல் கணபதி ஹோமம், பூர்வாங்க பூஜைகள் முதற்கால யாக பூஜை செய்யப்பட்டது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை நடந்தது.காலை, 10:00 மணிக்கு ஆனந்த விநாயகர், பகவதியம்மன், சன்னாசி அப்பர் சுவாமி கோவில் கோபு கலசத்துக்கு கும்பாபி ேஷகம் செய்து புனித நீர் ஊற்றப்பட்டது. திருக்காம்புலியூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை