உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தேய்பிறை அஷ்டமி கால பைரவர் பூஜை

தேய்பிறை அஷ்டமி கால பைரவர் பூஜை

கிருஷ்ணராயபுரம்,கிருஷ்ணராயபுரம், முருகன் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது.கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலை அருகில், பாலதண்டாயுதபாணி முருகன் கோவில் உள்ளது. இங்கு கால பைரவருக்கு தனி சன்னதி உள்ளது. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, நேற்று மாலை கால பைரவருக்கு பல்வேறு வகையான அபிேஷகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது. பின்னர், மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ