உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பாரதிய வரலாற்று தொகுப்பு பேரவை நிர்வாகிகள் கூட்டம்

பாரதிய வரலாற்று தொகுப்பு பேரவை நிர்வாகிகள் கூட்டம்

கரூர், கரூர் மாவட்ட பாரதிய வரலாற்று தொகுப்பு பேரவை நிர்வாகிகள் கூட்டம், தலைவர் செங்குட்டுவன் தலைமையில் கரூரில் நடந்தது.அதில், தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அமைப்பு செயலாளர் கதிரவன், மறக்கப்பட்ட வரலாறும், மறைக்கப்பட்ட வரலாறும் என்ற தலைப்பில் விளக்கம் அளித்து பேசினார். தொடர்ந்து, பேரவையின் வரும் ஓராண்டு செயல் திட்டங்கள் குறித்து முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் ராமசுப்பிரமணியன், திருப்பூர் கோட்ட செயலாளர் மாரிமுத்து, கரூர் மாவட்ட துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன், பொதுச்செயலாளர் இன்ப பிரபஞ்சன், இணைச்செயலாளர் மைதிலி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ