உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கரூரில் பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கரூர், நவ. கரூரில் உள்ள மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில், அக்கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில் ( எஸ்.ஐ.ஆர்.,) அனைத்து நிர்வாகிகளும் அவரவர் பூத்களில் கவனம் செலுத்த வேண்டும். டிசம்பர் மாதம் முதல் வாரத்தில், அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் பூத் கமிட்டி கூட்டம் சிறப்பாக நடத்த வேண்டும். டிசம்பர் இறுதியில், கரூர் மாவட்டம் வருகை தரும் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், மாவட்ட பொதுச் செயலர்கள் சாமிதுரை, செல்வராஜ், உமாதேவி, மாவட்ட துணைத் தலைவர்கள் சக்திவேல் முருகன், பழனிச்சாமி, மாவட்ட செயலர் முருகேசன், வெங்கடாசலம், ராஜா பிரதீப், மகளிர் அணி மாநில துணைத்தலைவர் மீனா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ