உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இரவில் மோட்ச தீபம் ஏற்ற முயற்சி; பா.ஜ.,வினர் கைது

இரவில் மோட்ச தீபம் ஏற்ற முயற்சி; பா.ஜ.,வினர் கைது

தாராபுரம்: திருப்பரங்குன்றம் மலையில், தீபம் ஏற்றக்கோரி, பூர்ணசந்திரன் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு மோட்ச தீபம் ஏற்ற, தாராபுரம் மின்வாரிய அலுவலகம் அருகேயுள்ள விநாயகர் கோவில் முன், திருப்பூர் மாவட்ட பொது செயலாளர் சுகுமார், மாவட்ட துணைத்தலைவர் மீனாட்சி, நகர தலைவர் ரங்கநாயகி தலைமையிலான பா.ஜ.,வினர், பா.ஜ., சார்பில் நேற்றிரவு திரண்டனர். தாராபுரம் போலீசார் அனுமதி இல்லை எனக்கூறி, அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதேபோல் குண்டடம் பகுதியில் மோட்ச தீபம் ஏற்றிய, பா.ஜ., மேற்கு ஒன்றிய தலைவர் கந்தாசமி உள்பட, 35 பேரை குண்டடம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை