மேலும் செய்திகள்
பிரதமர் மோடி பிறந்தநாள்; மக்களுக்கு அன்னதானம்
18-Sep-2025
கரூர், பிரதமர் மோடியின், 75வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கரூர் பா.ஜ., மத்திய மாநகரம் சார்பில், கரூர் ஐந்து ரோட்டில் உள்ள கோடீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. மாநகர தலைவர் சரண்ராஜ் முன்னிலையில், சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, கரூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை, அன்னதானம் நடந்தது. பின்னர், 10க்கும் மேற்பட்டவர்கள் ரத்த தானம் செய்தனர்.* கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன், பா.ஜ., வக்கீல் அணி சார்பில், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
18-Sep-2025