அ.தி.மு.க., சார்பில் பூத் கமிட்டி கூட்டம்: மாஜி அமைச்சர் பங்கேற்பு
கரூர், கரூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், ஒன்றிய செயலாளர் கமலகண்ணன் தலைமையில், ஆத்துார் பூலாம்பாளையம் கிராம பஞ்.,சில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.அதில், பூத் கமிட்டியில் இடம் பெற்றுள்ள நிர்வாகிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் வீடு வீடாக சென்று கடந்த, 2011-21 ல், 10 ஆண்டுகால அ.தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும், தற்போதைய தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்தும், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு குறித்தும் பொதுமக்களிடம் விளக்கம் அளித்து, தெரு முனை பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என, மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தெரிவித்தார்.கூட்டத்தில், அ.தி.மு.க., கிளை நிர்வாகிகள் கருணாகரன், கருணாநிதி, தமிழினியன் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.