நீண்ட வாளுடன் ரகளையில் ஈடுபட்ட சிறுவன் கைது
குளித்தலை, நீண்ட வாளுடன் ரகளையில் ஈடுபட்ட சிறுவனை, போலீசார் கைது செய்தனர்.குளித்தலை அடுத்த சின்ன கள்ளை பஸ் நிறுத்தத்தில், நேற்று முன்தினம் மாலை, 17 வயது சிறுவன் ஒருவன், தனது கையில் நீளமான வாளை வைத்துக் கொண்டு, நான் தாண்டா இந்த ஏரியாவுல பெரிய ரவுடி; என்கிட்ட யாராவது மோதினா அவ்ளவவுதான் என பேசிக்கொண்டு இருந்தார்.நங்கவரம் இன்ஸ்பெக்டர் ராஜ்குமாருக்கு வந்த தகவல்படி, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெரிய வாளுடன் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட சிறுவன் மீது, நங்கவரம் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.