உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சைக்கிள் வாங்கி தராததால் கரூர் வந்த சிறுவன் மீட்பு

சைக்கிள் வாங்கி தராததால் கரூர் வந்த சிறுவன் மீட்பு

கரூர்: நாமக்கல்லில் இருந்து கோபித்து கொண்டு, கரூர் வந்த பள்ளி சிறுவன், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.தேனி மாவட்டம், சின்னமனுார் பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவரது மகன் கார்த்திக், 11; அங்குள்ள அரசு பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், தாயுடன் நாமக்-கல்லில் உறவினர் வீட்டுக்கு, நேற்று முன்தினம் கார்த்திக் சென்-றுள்ளார். அங்கு, சைக்கிள் வாங்கி தரும்படி தாயிடம் கேட்-டுள்ளார். தாய் வாங்கி தர மறுத்ததால், கோபித்து கொண்டு நாமக்-கல்லில் இருந்து பஸ்சில், கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு நேற்று வந்-துள்ளார்.கரூர் பஸ் ஸ்டாண்டில் தனியாக சுற்றி திரிந்த கார்த்திக்கை, போலீசார் மீட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவ-லர்களிடம் ஒப்படைத்தனர். பிறகு, அவர்கள் விசாரணை நடத்தி, நாமக்கல்லில் இருந்து உறவினர்களை வரவழைத்து, நேற்று இரவு கார்த்திக் ஒப்படைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி