உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சி கல்லுாரியில் தாய்ப்பால் வார தின விழா

அரவக்குறிச்சி கல்லுாரியில் தாய்ப்பால் வார தின விழா

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி, அரசு கலை அறிவியல் கல்லுாரியில் தாய்மை ஒரு வரம் என்ற தலைப்பில், உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லுாரி முதல்வர் காளீஸ்வரி தலைமை வகித்தார். 18-23 வயதுக்குள் இருக்கும் பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என கருத்தரங்கில் விளக்கப்பட்டது. கரூரில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனை இயக்குனரும், மருத்துவருமான திவ்யா சுசில் பங்கேற்று, தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து பேசினார். பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ