உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தொடர்ந்து மழை பெய்வதால் செங்கல் உற்பத்தி பாதிப்பு

தொடர்ந்து மழை பெய்வதால் செங்கல் உற்பத்தி பாதிப்பு

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் தொடர் மழை காரணமாக, செங்கல் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சேங்கல், லட்சுமணம்பட்டி, வீரராக்கியம், கட்டளை, பால்ப்பட்டி, எழுதியாம்பட்டி பகுதிகளில் செங்கல் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை நடக்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் செங்கல் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழையால் மண் கலவையை வெயிலில் உலர்த்தும் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்காலிகமாக செங்கல் உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. மழை நின்றவுடன் பணிகள் துவங்கும் என, செங்கல் உற்பத்தி தொழிலாளர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை