உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பாலத்தின் அடியில் குப்பையை எரிப்பதால் தொற்று அபாயம்

பாலத்தின் அடியில் குப்பையை எரிப்பதால் தொற்று அபாயம்

அரவக்குறிச்சி, பள்ளப்பட்டியின் நுழைவாயிலில் நங்காஞ்சி ஆற்று பாலம் அமைந்துள்ளது. கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு, பாலத்தின் அடியில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால், தற்போது பாலத்தின் அடியில் குப்பை குவிந்துள்ளது. இதை குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லாமல், ரசாயன பொருள் மூலம் தீயிட்டு எரிக்கின்றனர். இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மேலும் நோய் தொற்று அபாயமும் உள்ளது. எனவே, நகராட்சி அதிகாரிகள் இதை பார்வையிட்டு அங்கிருந்து குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை