உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பவித்திரம் பஸ் ஸ்டாப்பில் பஸ் நிற்காததால் அவஸ்தை

பவித்திரம் பஸ் ஸ்டாப்பில் பஸ் நிற்காததால் அவஸ்தை

கரூர்: க.பரமத்தி அருேக, பவித்திரம் பஸ் ஸ்டாப்பில் பஸ்கள் நிற்கா-ததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், க.பரமத்தி அருகே பவித்திரம் பஸ் ஸ்டாப் உள்ளது. இங்கிருந்து, பாலமலை, குரும்-பப்பட்டி, ராசாம்பாளையம், பள்ளமருதபட்டி, நொச்சிப்பா-ளையம் உள்பட பல்வேறு ஊர்களுக்கு பஸ் ஏறி செல்கின்றனர். இந்த பஸ் ஸ்டாப்பில், கரூர், திருப்பூர், கோவை செல்லும் அரசு பஸ்கள் நின்று செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கரூர், கோவை செல்லும் புறநகர் அரசு பஸ்கள், இங்கு நிற்பதில்லை. கரூர் அல்லது க.பரமத்தி வழியாக செல்லும் அரசு பஸ்களில், பவித்திரம் செல்லும் பயணிகளை ஏற்ற மறுக்கின்-றனர். அப்படியே பஸ்சில் ஏறினாலும் வலுக்கட்டாயமாக பாதி வழியில் கீழே இறக்கி விடுகின்றனர். டவுன் பஸ்சை மட்டுமே நம்பி இருப்பதால், போதிய பஸ் வசதியின்றி கடும் அவதிக்குள்-ளாகி வருகின்றனர். இந்த பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல டிரைவர், கண்டக்டருக்கு அறிவுறுத்த வேண்டும் என பய-ணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை