உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தொழில் பழகுனர் பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

தொழில் பழகுனர் பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

கரூர்:தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) மூலம், தொழில் பழகுனர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளர்.இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் மற்றும் தொழில் பழகுனர் பயிற்சி வாரியம் இணைந்து, இணையதளம் மூலமாக பொறியியல், பட்டயப்படிப்பு (இயந்திரவியல், தானியியங்கிவியல்). பொறியியல் அல்லாத கலை அறிவியல், வணிகம் பட்டதாரிகளுக்கு தொழிற்பழகுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு, 2022 முதல், 2026ம் ஆண்டு வரை தேர்ச்சி பெற்றவர்கள் https://nats.education.gov.in என்ற இணையதளம் மூலமாக ஆக., 28க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி