உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பாராமெடிக்கல் படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு

பாராமெடிக்கல் படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கரூர், பாராமெடிக்கல் பட்டப்படிப்பு, பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன் லோகநாயகி தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கரூர் அரசு மருத்துவக் கல்லுாரியில் மாணவ, மாணவியருக்கான பாராமெடிக்கல் பட்டப்படிப்பு, பட்டய படிப்பு சேர்க்கை நடக்கிறது. இதில், பி.எஸ்.சி., ரேடியோகிராபி மற்றும் இமேஜிங் தொழில்நுட்பம், பி.எஸ்.சி., அறுவை சிகிச்சை கூடம் மற்றும் மயக்கவியல் தொழில்நுட்பம் ஆகிய மூன்றாண்டு பட்டப்படிப்பில் தலா, 20 இடங்களுக்கும், டிப்ளமோ மெடிக்கல் லேபரட்டரி டெக்னீஷியன், இரண்டாண்டு பட்டயப்படிப்பில், 50 இடங்களுக்கும், ரேடியோ கண்டறியும் தொழில்நுட்பம், இரண்டாண்டு பட்டயப்படிப்பில், 20 இடங்களுக்கும், டயாலிசிஸ் டெக்னீஷியன், மயக்க மருந்து தொழில்நுட்ப பாடப்பிரிவு, தியேட்டர் டெக்னீஷியன், அவசர சிகிச்சை தொழில்நுட்ப ஆகியவை ஓராண்டு சான்றிதழ் படிப்பில் தலா, 20 இடங்களுக்கான சேர்க்கை நடக்கிறது.இதற்கு பிளஸ் 2 ஆங்கில பாடத்துடன் இயற்பியல், வேதியியல், உயிரியல் (அல்லது) இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் பாராமெடிக்கல் படிப்புகளில் சேர்வதற்கு, www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் தரவரிசை பட்டியல் அடிப்படையில் கலந்தாய்வில் கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !