உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்ட அரசு இசை பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு

கரூர் மாவட்ட அரசு இசை பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு

கரூர், கரூர், அரசு இசை பள்ளியில் மாணவ, மாணவியர் சேர்க்கை நடக்கிறது.கரூர் மாவட்ட அரசு இசை பள்ளியில் குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய பிரிவுகள் உள்ளன. மூன்று ஆண்டுகள் முறையான பயிற்சிக்கு பின் அரசு தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த கல்வியாண்டுக்கான மாணவ, மாணவியர் சேர்க்கை நடக்கிறது. நாதசுரம், தவில் துறைக்கு எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதும். 13 முதல், 25 வயதுக்குப்பட்ட ஆண், பெண் இருபாலரும் சேரலாம்.பயிற்சி கட்டணமாக ஆண்டுக்கு, 350 ரூபாய்- மட்டுமே பெறப்படுகிறது. தொலைவில் இருந்து வரும் மாணவ, மாணவியருக்கு இலவசமாக தங்கும் விடுதி மற்றும் பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இசை பள்ளியில் படிக்கும் அனைவருக்கும் மாதம்தோறும், 400 ரூபாய்- ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இங்கு படித்த மாணவர்களுக்கு அரசுத்துறை, கோவில்களில் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விபரம் பெற, 95002 77994 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை