மேலும் செய்திகள்
நாமக்கல் உழவர் சந்தையில் 25 டன் காய்கறி விற்பனை
03-Dec-2024
கரூர்: தை மாதம் துவங்க உள்ள நிலையில், கல்லா மாங்காய் வரத்து துவங்கியுள்ளது. ஒரு கிலோ, 90 ரூபாய்க்கு விற்பனையாகிறது.தமிழகத்தில் மாங்காய் சீசன், மார்ச் முதல் ஜூலை வரை இருக்கும். முன்னதாக, மார்கழி மாதம் முதல், கிளி மூக்கு என அழைக்கப்படும், கல்லா மாங்காய் விற்பனைக்கு வர துவங்கியுள்-ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி, திருப்பூர் மாவட்டம் தாரா-புரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் இருந்து, கல்லா மாங்காய் கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டுக்கு வர துவங்-கியுள்ளது. முதல் தரம் மாங்காய் ஒரு கிலோ, 90 ரூபாய் வரை-யிலும், இரண்டாம் தரம் மாங்காய், 60 முதல், 70 ரூபாய் வரை விற்பனையாகிறது.இதுகுறித்து, உழவர் சந்தை வியாபாரிகள் கூறியதாவது: ஊறுகாய் மற்றும் ஏற்றுமதி தேவைக்காக, கல்லா மாங்காய் அதிகம் விற்-பனை செய்யப்படும். தற்போது சீசன் துவங்கியுள்ளதால் கிலோ, 90 ரூபாய் வரை விற்கிறது. மார்ச் மாதத்தில் மற்ற மாங்காய் வகைகள் விற்பனைக்கு வரும். அப்போது கல்லா மாங்காய் விலை குறையும். குறிப்பாக, ஜூன், ஜூலை மாதங்களில் கல்லா மாங்காய், ஒரு கிலோ, 20 ரூபாய்க்கு விற்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
03-Dec-2024