உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஜூடோ பயிற்றுனருக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஜூடோ பயிற்றுனருக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கரூர் : கரூர் கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கைகரூர் மாவட்டத்தில், கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ஜூடோ பயிற்றுனர், 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படவுள்ளனர். கரூர் மாவட்டத்தில் வசிப்பராக இருத்தல் வேண்டும்.சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராவோ இருத்தல் வேண்டும். தமிழ்நாடு சார்பாக தேசிய அளவிலான, சீனியர் விளையாட்டு போட்டியில் அல்லது கேலோ இந்தியா கேம்ஸ் போட்டியில் கலந்து கொண்டவராக இருத்தல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு, 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சி ஊதியமாக, 25,000 ரூபாய் வழங்கப்படும். கேலோ இந்தியா ஜூடோ பயிற்சியாளருக்கு விண்ணப்பிக்க வரும், 24 மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பங்களை, மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை