உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குழாயை சுற்றியுள்ள செடி கொடிகளை அகற்றலாமே

குழாயை சுற்றியுள்ள செடி கொடிகளை அகற்றலாமே

கரூர், கரூர் அருகே, வெள்ளியணை அரசு பள்ளி அருகில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, பொது குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இதை சுற்றி போதிய வடிகால் வசதி இல்லாததால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் செடி, கொடி படர்ந்துள்ளதால், பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மழை காரணமாக, பல்வேறு வகையான காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழாய்களை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்பதால், கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளது. எனவே, பொது கு-டிநீர் குழாய் அருகே, சுத்தம் செய்து தண்ணீர் தேங்கி நிற்காதவாறு நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை