உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கார்வழி பஞ்.,ல் திட்டப்பணிகள்

கார்வழி பஞ்.,ல் திட்டப்பணிகள்

கரூர், க.பரமத்தி ஒன்றியம், கார்வழி பஞ்சாயத்துகுட்பட்ட குமாரவலசு மற்றும் சீலநாய்க்கன்பட்டி ஆகிய பகுதிகளில், தானியக்களம் வேண்டியும், கார்வழியில் சிமென்ட் சாலை கேட்டும் இப்பகுதி மக்கள் வலியுறுத்திவந்தனர். அதன்படி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், குமாரவலசு மற்றும் சீலநாய்க்கன்பட்டி பகுதிகளில் தலா, 8.39 லட்சம் ரூபாயில் தானியக்களமும், கார்வழியில் சிமென்ட் சாலை அமைக்க, 1.35 லட்சம் ரூபாய் செலவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்குவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில், க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) கிருஷ்ணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கற்பகவள்ளி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை