உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மொபட்டில் சென்ற போது தாய் முன் மகளை கடத்திய 4 பேர் மீது வழக்கு

மொபட்டில் சென்ற போது தாய் முன் மகளை கடத்திய 4 பேர் மீது வழக்கு

குளித்தலை;இருசக்கர வாகனத்தில் சென்றபோது கல்லுாரி மாணவியை, தாய் முன் காரில் கடத்தி சென்ற நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.குளித்தலை அடுத்த போத்தராவுத்தன்பட்டி பஞ்., காக்காயம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை மனைவி புஷ்பவல்லி, 35. இவரது மகள் ஹேமலதா, 19, தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., இயற்பியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இருவரும் கடந்த செப்.,29 மாலை 4:45 மணியளவில் தனக்கு சொந்தமான மொபட்டில், பஞ்சப்பட்டி சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். பஞ்சப்பட்டி குள்ளம்பட்டி சாலையில், சோலார் பிளான்ட் அருகே ஆம்னி காரில் வந்த காக்காயம்பட்டி கிராமத்தை சேர்ந்த கோகுல்நாத், 25, ஓனைப்பாறைப்பட்டி முத்துக்குமார், குப்பனம்பட்டி கமல், ராஜேஷ் ஆகியோர் மொபட்டை தள்ளிவிட்டு, தாய் கண் முன் மகளை காரில் கடத்திச் சென்றனர்.இது குறித்து தாய் கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !